அகோர சிவ வடிவம்: 24

 அகோர சிவ வடிவம்: 24


சத்ததந்து என்பவன் சிவபெருமானிடம் பல வரங்கள் வாங்கி ஆணவமிகுதியாய் வாழ்ந்து வந்தான். தான் அடைந்த பெரும்பேற்றிற்கு ஈசனே காரணம் என்பதனையும் மறந்து வாழ்ந்து வந்தான்.

ஒருமுறை அவன் வேள்வி ஒன்றை நடத்த திட்டமிட்டு, ஈசனை தவிர்த்து திருமால், பிரம்மா,தேவர்கள் முதலானோரை அழைத்தான். அனைவரும் அவனுக்கு அறிவுரை கூறினர், ஈசனை தவிர்த்து யாகம் வளர்த்தால் அழிவுதான் உனக்கு ஏற்படும் என எச்சரித்தனர். எவ்வளவு கூறியும் அவன் கேட்கவில்லை, யாகம் வளர்க்க தொடங்கினான்.இச்செய்தியை அறிந்த நாரதார், நேரே கைலாயம் சென்று ஈசனிடம் நடந்ததை கூற, வெகுண்டெழுந்த ஈசன், யாக.தை அழித்தொழிக்க கிளம்பினார்.


மண்டலத்தினை ரதமாகவும், உலகையே சக்கரமாகவும், அக்னிபகவானை வில்லாகவும், சந்திரன் நாணாகவும், வருணன் பாணமாகவும், போர்க்கருவிகளை ஆயுதமாய் ஏந்தியும் புறப்பட்டார்.அப்போது அங்கிருந்த வீரபத்திரனை நோக்கி "சத்ததந்துவின் யாகத்தை அழித்துவிடு" என ஆணையிட்டார். குமரக்கடவுளை சாரதியாய் கொண்டு தேரில் கிளம்பினார் வீரபத்திரர். வருண அஸ்திரத்தை எய்தி யாகத்தை அழித்தார் வீரபத்திரர். அத்துடன் நிற்காமல் தன் அகோர ஆத்திரம் கொண்டு அவனை கொன்று முடித்தார். கோபம் தனியாது மேலும் தேவர்களையும் கொன்றழித்தார். அவர்களின் மனைவியர் கைலாயம் சென்று ஈசனிடம், தம் கணவருக்காய் "உயிர்பிச்சை" கேட்க, ஈசனும் அவர்களை மன்னித்து உயிரளித்தார். கைலைக்கு சென்று நடந்ததை விவரித்து கூறினார், வீரபத்திரர். தன் அகோர அத்திரத்தால், சத்ததந்துவை கொன்றதால் இம்மூர்த்திக்கு, "அகோர அத்திர மூர்த்தி" எனவும் பெயர் உண்டு.









Comments

  1. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் (கொடிக்கம்பத்தின் அருகில்) உள்ளவை அகோர வீரபத்திர சிற்பங்கள் என நினைக்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அடிமுடிகாணா அண்ணல்-16

பைரவ வடிவம்-25

சதாசிவ வடிவம்-11