Posts

Showing posts from December, 2020

பைரவ வடிவம்-25

Image
 பைரவ வடிவம்-25 சைவசமயத்தின் அகப்புறச்சமயங்களாய் கூறப்படும் ஆறு பிரிவுகள்: 1.பாசுபதம் 2.மாவிரதம் 3.காளாமுகம்(காளம்) 4.வாமம்(சாக்தேயம்) 5.பைரவம்(வைரவம்) 6.ஐக்கியவாத சைவம் இதில் பைரவரே பரம்பொருள், அவரடியில் சேருவதே வீடுபேறு கொடுக்கும் என்பது பைரவசமய கோட்பாடு! பைரவகடவுளிலிருந்து எட்டுத்தலைகள் தோன்றி உயிர்களுக்கு பந்தமும், வீடுபேறும் அளிக்கும் என்பது பைரவசமயநெறி. போகத்தால் வரும் மார்க்கமே முக்தியை அளிக்கும் என்பது இவர்கள் கொள்கை. நரபலியிடுதல், மண்டையோட்டில் உணவருந்துதல் கபாலத்தையேந்தி பிச்சையெடுத்தல் ஆகிய பழக்கமும் உண்டு. சிறுதொண்டரிம் பிள்ளைக்கறி கேட்டுவந்த இறைவனின் கோலம் "வைராகி" கோலமே என்பர். செஞ்சடையும், நீலவடிவமும், திருவடிகளில் சிலம்பும், மார்பில் கபாலமாலையும், கைகளில் சூலம், மழு, பாசம், உடுக்கை ஏந்தி கோரப்பற்களுடன் சீற்றம் கொண்டவராய் இவரது தோற்றம் காணப்படும்! ஊழிகாலத்தில் தாண்டவமாடி யாவற்றையும் அழிப்பார், நான்மறைகளும் நாய் வடிவில் இவர் பின்னே இருக்கும். நாய் வாகனம் இல்லாமலும் இருப்பார், மேலும் யானை, குதிரை, எருது, அண்ணம், கழுகு, மயில் போன்றவையும் இவரது வாகனங்களாகும். பைரவர