கங்காள மூர்த்தியும் திரிவிக்ரமரும்
கங்காள மூர்த்தியும் திரிவிக்ரமரும்: "குரலாய் அணுகி மூவடி மண் கொண்டு நெடுகி மூவுலகுந் திறனால் அளந்து மாவலியைச் சிறையிற் படுத்து வியந்தானை இறவேச வட்டிவெரி நெலும்பை எழிற் கங்காளப்படையென்ன அவோர் வழுத்தக் கைகொண்ட அங்கணாளன் திருவுருவம்" சிவாலயம் ஒன்றின் சுடர் மங்குகையில், ஈசனார் தேவியை பார்த்து, இத்திருவிளக்கின் திரியை தூண்டி, விளக்கினை ஒளிரச் செய்பவர், மூவுலகங்களையும் ஆளுவார்! என கூறுகிறார்.அச்சமயம் அங்குந்த எலி ஒன்று நெய்யினை குடித்ததால், திரி தூண்டப்பட்டு விளக்கு ஒளிர்கிறது! ஈசனின் அருளால் அந்த எலி 'மாவெலி' என்ற பெயரில் அசுர குலத்தில் அவதரித்து உலகம் முழுமையும் ஆட்சி செய்தது. அசுரர் கை ஓங்க, தேவர்கள் திருமாலிடம் முறையிட, அச்சமயம் திருமாலின் பக்தையான திதி தனக்கும் பெருமாளே மகனாய் பிறக்க வேண்டும் என வேண்ட, அதனையேற்று, காசிப முனிக்கும் திதிக்கும் மகனாய் "வாமனன்" அவதாரம் எடுக்கிறார். அரக்கனாயினும் சிறந்த கொடையாளியாய் சிறப்புடன் ஆட்சி புரிகிறான். மாவலியை அவனது கொடைத்தன்மையை வைத்தே வீழ்த்த எண்ணிய திருமால், மாவலியின் அவைக்கு வருகிறார். அவரை வரவேற்ற மாவலி ரதம், ய