கங்காள மூர்த்தியும் திரிவிக்ரமரும்
கங்காள மூர்த்தியும் திரிவிக்ரமரும்:
"குரலாய் அணுகி மூவடி மண் கொண்டு
நெடுகி மூவுலகுந்
திறனால் அளந்து மாவலியைச் சிறையிற் படுத்து வியந்தானை
இறவேச வட்டிவெரி நெலும்பை எழிற் கங்காளப்படையென்ன
அவோர் வழுத்தக் கைகொண்ட
அங்கணாளன் திருவுருவம்"
சிவாலயம் ஒன்றின் சுடர் மங்குகையில், ஈசனார் தேவியை பார்த்து, இத்திருவிளக்கின் திரியை தூண்டி, விளக்கினை ஒளிரச் செய்பவர், மூவுலகங்களையும் ஆளுவார்! என கூறுகிறார்.அச்சமயம் அங்குந்த எலி ஒன்று நெய்யினை குடித்ததால், திரி தூண்டப்பட்டு விளக்கு ஒளிர்கிறது!
ஈசனின் அருளால் அந்த எலி 'மாவெலி' என்ற பெயரில் அசுர குலத்தில் அவதரித்து உலகம் முழுமையும் ஆட்சி செய்தது. அசுரர் கை ஓங்க, தேவர்கள் திருமாலிடம் முறையிட, அச்சமயம் திருமாலின் பக்தையான திதி தனக்கும் பெருமாளே மகனாய் பிறக்க வேண்டும் என வேண்ட, அதனையேற்று, காசிப முனிக்கும் திதிக்கும் மகனாய் "வாமனன்" அவதாரம் எடுக்கிறார்.
அரக்கனாயினும் சிறந்த கொடையாளியாய் சிறப்புடன் ஆட்சி புரிகிறான். மாவலியை அவனது கொடைத்தன்மையை வைத்தே வீழ்த்த எண்ணிய திருமால், மாவலியின் அவைக்கு வருகிறார். அவரை வரவேற்ற மாவலி ரதம், யானை, குதிரை, தங்கம், வெள்ளி கொடுத்து வரவேற்றார். இவை எமக்கு வேண்டாம் மாவலி என கூறி, எனக்கு தேவை மூன்றடி மண் எனகூறி னார். அசுரகுரு சுக்ராச்சாரியார் திருமாலின் எண்ணத்தை உணர்ந்து மாவலியிடம் எச்சரிக்கிறார். இதனை காதில் வாங்காத மாவலி, வாமணனின் கோரிக்கைக்கு சம்மதிக்கிறார். திரிவிக்ரம உரு கொண்ட வாமணன் பிரம்மாண்டமாய் விஸ்வரூபம் எடுக்க, மூவுலகையும் ஈரடியால் அளந்து மூன்றாம் அடிக்கு இடமில்லாது மாவலியின் தலைமீது அழுத்த, ஆவேசம் அப்போது குன்றாத திரிவிக்ரமன், உக்கிரம் குறையாது உலக உயிர்களை துன்புறுத்த தொடங்க, தேவர்கள் மீண்டும் ஈசனிடம் போய் சரணடைந்தனர். வாமனரின் ஆவேசத்தை அடக்க, வாமனனின் மார்பிலே ஓங்கி வச்சிரதண்டத்தினால் அடிக்க, வாமனருடைய முதுகெழும்பை உரித்து தம் கரத்திலே ஏந்தி 'கங்காளர்' அவதாரம் எடுத்தார்.
"இருவர்கள் உடல்பொறையோடு திரியெழில் உருவுடையவன்" என சம்பந்தரும்,
""கோன்நா ரணன் அங்கந் தோள்மேற்
கொண்டு கொழுமலரான்
தன்சிரத்தை கையிலேந்திக்
கானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக்
கங்காள வேடராய்"
என நாவுகரசரும் இவ்வ்டிவை திருமுறைகளில் பாடுகின்றனர்.
கங்காளரின் இந்த தோற்றத்தை லிங்கபுராணம், காஞ்சிப்புராணம், ஆதித்யபுராணம் போன்றவை விளக்குகின்றன. இவ்வடிவம் தென்னகத்திற்கே உடைய தனித்துவ வடிவம்.
இக்கோலத்தில் ஈசன் நின்றநிலையிலும், இடதுகாலை ஊன்றி, வலதுகாலை சற்று வளைத்தும், புலித்தோலாள் ஆன ஆடையை அணிந்து, மார்பில் பூனூல் அணிந்து, வாமனை கொன்ற பூரிப்பில் மகிழ்ச்சியான முகத்துடன் தோற்றமளிப்பார். வலதுகரத்தில் கடகக்குறிப்பும், இடக்கரத்தில் 'கங்காள தண்டமும்' இருக்கும்.
கங்காளரும், பிட்சாடனாரும் தோற்றத்தில் ஒருவர் போல் தோன்றினாலும், பிட்சாடனார் கோலத்தில் ஈசன் ஆடையின்றி கையில் கபாளம் ஏந்தி காணப்படுவார். கங்காளரோ ஆடையணிந்திருப்பார். அருகேயுள்ள மானுக்கு அருகம்புல் கொடுப்பதாய் காட்சியளிப்பார்.
பிரம்மன், திருமால் முதலானோர், வினைகீடாக வடிவு கொண்டு வினைக்கழிவில் இறப்பர். அங்ங்னம் இறந்தவர்களின் எலும்பினை, நரம்பில் கோர்த்து, முழுஎழும்பை தண்டமாக ஏந்தி!
"ஈறில்லாதவன் யான் ஒருவனே" என்பதை உணர்த்தும் வடிவம், கங்காள வடிவம் என்கிறார். மகாவித்துவான் ச.தண்டபாணி தேசிகர்.
ஓர் அருமையான ஆரம்பம். தொடர்ந்து வாசிக்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDelete