Posts

பைரவ வடிவம்-25

Image
 பைரவ வடிவம்-25 சைவசமயத்தின் அகப்புறச்சமயங்களாய் கூறப்படும் ஆறு பிரிவுகள்: 1.பாசுபதம் 2.மாவிரதம் 3.காளாமுகம்(காளம்) 4.வாமம்(சாக்தேயம்) 5.பைரவம்(வைரவம்) 6.ஐக்கியவாத சைவம் இதில் பைரவரே பரம்பொருள், அவரடியில் சேருவதே வீடுபேறு கொடுக்கும் என்பது பைரவசமய கோட்பாடு! பைரவகடவுளிலிருந்து எட்டுத்தலைகள் தோன்றி உயிர்களுக்கு பந்தமும், வீடுபேறும் அளிக்கும் என்பது பைரவசமயநெறி. போகத்தால் வரும் மார்க்கமே முக்தியை அளிக்கும் என்பது இவர்கள் கொள்கை. நரபலியிடுதல், மண்டையோட்டில் உணவருந்துதல் கபாலத்தையேந்தி பிச்சையெடுத்தல் ஆகிய பழக்கமும் உண்டு. சிறுதொண்டரிம் பிள்ளைக்கறி கேட்டுவந்த இறைவனின் கோலம் "வைராகி" கோலமே என்பர். செஞ்சடையும், நீலவடிவமும், திருவடிகளில் சிலம்பும், மார்பில் கபாலமாலையும், கைகளில் சூலம், மழு, பாசம், உடுக்கை ஏந்தி கோரப்பற்களுடன் சீற்றம் கொண்டவராய் இவரது தோற்றம் காணப்படும்! ஊழிகாலத்தில் தாண்டவமாடி யாவற்றையும் அழிப்பார், நான்மறைகளும் நாய் வடிவில் இவர் பின்னே இருக்கும். நாய் வாகனம் இல்லாமலும் இருப்பார், மேலும் யானை, குதிரை, எருது, அண்ணம், கழுகு, மயில் போன்றவையும் இவரது வாகனங்களாகும். பைரவர

அகோர சிவ வடிவம்: 24

Image
  அகோர சிவ வடிவம்: 24 சத்ததந்து என்பவன் சிவபெருமானிடம் பல வரங்கள் வாங்கி ஆணவமிகுதியாய் வாழ்ந்து வந்தான். தான் அடைந்த பெரும்பேற்றிற்கு ஈசனே காரணம் என்பதனையும் மறந்து வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் வேள்வி ஒன்றை நடத்த திட்டமிட்டு, ஈசனை தவிர்த்து திருமால், பிரம்மா,தேவர்கள் முதலானோரை அழைத்தான். அனைவரும் அவனுக்கு அறிவுரை கூறினர், ஈசனை தவிர்த்து யாகம் வளர்த்தால் அழிவுதான் உனக்கு ஏற்படும் என எச்சரித்தனர். எவ்வளவு கூறியும் அவன் கேட்கவில்லை, யாகம் வளர்க்க தொடங்கினான்.இச்செய்தியை அறிந்த நாரதார், நேரே கைலாயம் சென்று ஈசனிடம் நடந்ததை கூற, வெகுண்டெழுந்த ஈசன், யாக.தை அழித்தொழிக்க கிளம்பினார். மண்டலத்தினை ரதமாகவும், உலகையே சக்கரமாகவும், அக்னிபகவானை வில்லாகவும், சந்திரன் நாணாகவும், வருணன் பாணமாகவும், போர்க்கருவிகளை ஆயுதமாய் ஏந்தியும் புறப்பட்டார்.அப்போது அங்கிருந்த வீரபத்திரனை நோக்கி "சத்ததந்துவின் யாகத்தை அழித்துவிடு" என ஆணையிட்டார். குமரக்கடவுளை சாரதியாய் கொண்டு தேரில் கிளம்பினார் வீரபத்திரர். வருண அஸ்திரத்தை எய்தி யாகத்தை அழித்தார் வீரபத்திரர். அத்துடன் நிற்காமல் தன் அகோர ஆத்திரம் கொண்டு அவ

சுரம் நீக்கும் இறைவன்:23

Image
 சுரம் நீக்கும் இறைவன்:23 மாபலிசக்ரவர்த்தியின் மகன் வாணாசுரன் சிறந்த சிவபக்தன், ஈசனை நோக்கி தவமியற்றி உலகம் முழுவதும் ஆளும் வல்லமையும், அக்கினையையே மதிலாய் கொண்ட அரண்மனையும் வரமாய் பெற்றான். உலகை ஆட்சி செய்தவன் மீண்டும் இறைவனிடம் தவமியற்றி, தம்முடைய மாளிகையில் விநாயகர், முருகன், உமை, ஈசன் தம் மாளிகையில் வீற்றிருக்குமாறு வேண்ட இறைவனும் அவ்வாறே தம் குடும்பத்துடன் வாணாசுரனது மாளிகையில் வீற்றிருந்தார். இறைவனே தம் வீட்டில் எழுந்தருளியிருந்ததால், மமதை அதிகமாகி உலகோரை அச்சுறுத்தினான்.தன்னை எதிர்க்க எவறும் இல்லாததால் செருக்கு மிகுதியாகி இறைவன் என்பதையே மறந்து ஈசனை போர்புரிய அழைத்தான். ஈசன் புன்னகைத்து, "உன்னோடு துவாரகை நாயகன் கண்ணன் போர்புரிவான்" என்றார். கண்ணன் என்னுடன் பலமுறை போரில் தோற்றோடியவர், அவரா எனக்கு ஈடு! என பதிலுறைத்தான் வாணாசுரன், அச்சமயம் வாணாசுரனின் மகள் உசை, கண்ணபிரானின் மகன் அநிருத்தன் தன்னோடு கனவில் உடலோடு கலந்ததாய், கனவு கண்டாள். அதன் பலனாய் அவள் கருவுற்றாள். இதனையறிந்த வாணாசுரன், அநிருத்தனை சிறையிலிட்டான். தன் மகனை மீட்க வெகுண்டெழுந்த கண்ணன் படையை திரட்டி வந்தான்.

இடபாந்திகர்-22

Image
  இடபாந்திகர்-22 நரன்களின் ஒரு வருடம் என்பது 12 மாதங்கள். ஆனால் தேவர்களுக்கு நரன்களின் ஒரு வருடம் என்பது ஒரு நாள். அதன்படி 360 மனித வருடம், தேவர்களின் ஒரு வருடமாகும். 12,000 தேவ வருடம் என்பது ஒரு சதுர்யுகம், 2000 சதுர்யுகம் கொண்டது நான்முகனான பிரம்மரின் ஒருநாள். இத்தகைய நாட்களை கொண்ட நூறு ஆண்டு காலம் என்பது பிரம்மாவின் ஆயுட்காலம். பிரம்மாவின் ஆயுட்காலம் என்பது, திருமாலின் ஒரு நாளாகும். திருமாலின் நூறு ஆண்டுகள் அவரது ஆயுட்காலம். திருமாலின் ஆயுள் முடிந்ததும். உலகின் அனைத்து ஆன்மாக்களும் மறையும். அப்பேரூழிக்காலத்தில் எஞ்சியிருந்த சிவன்,உமையாள் காணும் வண்ணம் ஊழித்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். இவ்வூழிக்காலத்தில் தானும் அழியபோகிறோம் என வருந்திய தருமதேவதை இடபமாக மாறி ஈசனிடம் தஞ்சம் புகுந்தது.  தம்மை இப்பேரூழிகாலத்தில் அழியாது காக்கவேண்டும்! தான் இடைவிடாமல் உங்களுக்கு பணிசெய்ய காத்திருக்கிறேன், என அஞ்சியபடி வேண்டி நின்றது! ஈசனும் அருட்கொண்டு, "அஞ்சாதே!" என அபயமளித்து தம் கரத்தினை அதன் தலைமேல் வைத்து காத்தருளினார். அக்கோலமே "இடபாந்திகர்" கோலம் எனப்படும்!  இறைவன் காளைமீது சாய

ஊர்த்துவ தாண்டவர்-21

Image
 ஊர்த்துவ தாண்டவர்-21 சும்பன், நிசும்பன் எனும் இரு அசுரர்கள், உலக உயிர்களையும் தேவர்களையும் துன்புறுத்தி வந்தனர். இவர்களின் தீமையை பொறுக்க இயலா தேவர்கள்,  பார்வதிஅம்மையை நோக்கி கடுந்தவமியற்றி தம்மை காத்தருளுமாறு வேண்டினர். ஈசரின் அனுமதியை பெற்று, "அசுரர்களை அழிப்பேன்" என வெஞ்சினம் கொண்டு கிளம்பினார். தன்னை கொல்ல வரும் அம்மையின் பேரழகில் மதிமயங்கிய நிசும்பன் தன்னை மணந்து கொள்ளும்படி அம்மையிடம் தூதுஅனுப்பினான், நிசும்பனிடம் விளையாட எண்ணிய அம்மை, "என்னை எவர் போரில் வெல்கிறாரோ! அவரே எனை வெல்ல முடியும்" என மறு செய்தி அனுப்பினார். கடும்போர் மூண்டது.  அனைத்து அசுரர்களையும் வெறிகொண்டு அழித்தாள் அம்மை. இறுதியாய் "ரத்தபீசன்" என ஒருவன் மட்டும் எஞ்சினான். அவன் உடலில் உதிரும் ஒவ்வொருதுளி உதிரத்திலும், ஒரு அசுரன் தோன்றிகொண்டேயிருந்தான். இவனை அழித்தாளொழிய போர் முற்றுபெறாது என எத்தனித்து தன் பிரதியான ஆக்ரோஷ காளியை வரவழைத்தார். ரத்தபீசனை பார்வதியம்மை கொள்ளும்போது, அவன் உடலில் வழியும் இரத்தத்தை குடித்து முடிக்குமாறு காளிக்கு ஆணையிட, காளியும் அம்மையின் கட்டளையை நிறைவேற்ற மடி

திரிபாதமூர்த்தி-20

Image
  திரிபாதமூர்த்தி-20 ஊழிக்காலம் தோன்றுகையில், நான்முகன், திருமால், உருத்திரன் மூவரும் பரம்பொருளான சிவனிடத்தில் ஒடுங்குவர். மாதம் பன்னிரண்டு கொண்டது தேவர்களுக்கு ஒருநாள், இந்த நாட்கள் பன்னீரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தால் ,அதுவே ஒரு ஊழிக்காலம்.இந்த ஊழிக்காலம் நான்கு கடந்தாலே அது பிரம்மனுக்கு ஒரு பகல். இதற்குள் தேவர்கள் ,மாவலி ,அற்புதன் போன்றோர் துஞ்சுவர்.இவர்களுக்கு பின் பிரம்மன் துஞ்சுவார்.இத்தகைய பிரமர் ஒருகோடி பேர் துஞ்சினால் அது திருமாலிற்கு ஒரு பகலாம். அதன்பின் தன் காலஅளவு கடந்தபின் திருமாலும்,ருத்திரனும் துஞ்சியபின் இவர்கள் அனைவரும் பரம்பொருளான சிவனிடம் கலந்துவிடுவர்.  இவ்வாறு பிரமர், திருமால், ருத்திரன் என மூவரும் பரம்பொருளான ஈசனிடம் ஒடுங்கிய கோலமே "திரிபாத மூர்த்தி" எனப்படும். இன்று இக்கோலம் தவறுதலாய் "ஏகபாதமூர்த்தி" என அழைக்கப்பட்டு வணங்கபடுகிறது பல தலங்களில். உண்மையில் ஏகபாதமூர்த்தி என்பது சிவதிருமேனிகளில் வேறு ஒரு கோலமாகும்.  ஏகபாதமூர்த்தி கோலத்தில் திருமாலும், பிரம்மனும் காலின்றி நேரே இறைவனிடத்தில் இணைந்திருக்கும் கோலமாகும்.

மகாசதாசிவ வடிவம்-19

Image
  மகாசதாசிவ வடிவம்-19 ஈசனின் ஐந்துமுக வடிவான சதாசிவ மூர்த்தயின், ஒவ்வொரு முகத்திலும், ஐந்து முகமாய் ஆகமொத்தம் 25 முகவடிவங்கள் ஏற்படுத்தப்பட்ட வடிவம் "மகேஸ்வர வடிவம்" எனப்படுகிறது. 25 முகங்கள், 50 கைகள் என பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்ட இவ்வடிவம் "மகாசதாசிவ மூர்த்தி" ஆகும். பெரும்பாலும் கோபுரங்களின் சுதைசிற்பமாய் இவ்வுருவம் அமைந்துள்ளது. கைலாயத்தில் இருந்து, அனைத்து உயிர்களுக்கும் மகாசதாசிவர் அருள்புரிவதாய் ஸ்ரீஸ்கந்த புராணமும், ஸ்ரீதத்துவநிதியும்  கூறுகிறது!  ஆனால் "சிவப்பராக்கிரமம்" நூலோ கணக்கிமுடியா அளவு முகத்தினையும், கரத்தினையும் கொண்டவரென கூறுகிறது.                                                                                                                                                                                                          "எண்ணில்பல் கோடி சேவடி முடிகள் எண்ணில்பல் கோடிதிண் தோள்கள் எண்ணில்பல் கோடி திருவுரு நாமம் ஏர்கொள்முக் கண்முகம் இயல்பும் எண்ணில்பல் கோடி எல்லைக்கப் பாலாய் நின்றைஞ்ஞூற் றந்தணர் ஏத்தும் எண்ணில்பல் கோடி குணத்தர