இடபாந்திகர்-22
இடபாந்திகர்-22
நரன்களின் ஒரு வருடம் என்பது 12 மாதங்கள். ஆனால் தேவர்களுக்கு நரன்களின் ஒரு வருடம் என்பது ஒரு நாள். அதன்படி 360 மனித வருடம், தேவர்களின் ஒரு வருடமாகும்.
12,000 தேவ வருடம் என்பது ஒரு சதுர்யுகம், 2000 சதுர்யுகம் கொண்டது நான்முகனான பிரம்மரின் ஒருநாள். இத்தகைய நாட்களை கொண்ட நூறு ஆண்டு காலம் என்பது பிரம்மாவின் ஆயுட்காலம். பிரம்மாவின் ஆயுட்காலம் என்பது, திருமாலின் ஒரு நாளாகும். திருமாலின் நூறு ஆண்டுகள் அவரது ஆயுட்காலம். திருமாலின் ஆயுள் முடிந்ததும். உலகின் அனைத்து ஆன்மாக்களும் மறையும். அப்பேரூழிக்காலத்தில் எஞ்சியிருந்த சிவன்,உமையாள் காணும் வண்ணம் ஊழித்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். இவ்வூழிக்காலத்தில் தானும் அழியபோகிறோம் என வருந்திய தருமதேவதை இடபமாக மாறி ஈசனிடம் தஞ்சம் புகுந்தது.
தம்மை இப்பேரூழிகாலத்தில் அழியாது காக்கவேண்டும்! தான் இடைவிடாமல் உங்களுக்கு பணிசெய்ய காத்திருக்கிறேன், என அஞ்சியபடி வேண்டி நின்றது!
ஈசனும் அருட்கொண்டு, "அஞ்சாதே!" என அபயமளித்து தம் கரத்தினை அதன் தலைமேல் வைத்து காத்தருளினார். அக்கோலமே "இடபாந்திகர்" கோலம் எனப்படும்!
இறைவன் காளைமீது சாய்ந்தவாறு, அதன் இரு கொம்புகளுக்கிடையே, தன் கரத்தினை வைத்து ஆற்றுப்படுத்தும் வண்ணம் இக்கோலம் அமைக்கப்படும்.
இடபாந்திகரைப் பற்றி அறிந்தேன். இடபாரூடர் என்றும் சொல்வதுண்டு என்று நினைக்கிறேன். புகைப்படங்களில், அந்தந்த இடங்களைக் குறிப்பிட்டது மிகவும் சிறப்பு. இதனைத் தான் ஆரம்பத்திலிருந்து நான் எதிர்பார்த்திருந்தேன். அந்தந்த இடங்களுக்குச் செல்வர்களுக்கு அச்சிற்பங்களைக் காண இந்த உத்தி மிகவும் உதவும்.
ReplyDeleteநன்றி
Delete