மகாசதாசிவ வடிவம்-19

 மகாசதாசிவ வடிவம்-19


ஈசனின் ஐந்துமுக வடிவான சதாசிவ மூர்த்தயின், ஒவ்வொரு முகத்திலும், ஐந்து முகமாய் ஆகமொத்தம் 25 முகவடிவங்கள் ஏற்படுத்தப்பட்ட வடிவம் "மகேஸ்வர வடிவம்" எனப்படுகிறது. 25 முகங்கள், 50 கைகள் என பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்ட இவ்வடிவம் "மகாசதாசிவ மூர்த்தி" ஆகும். பெரும்பாலும் கோபுரங்களின் சுதைசிற்பமாய் இவ்வுருவம் அமைந்துள்ளது.

கைலாயத்தில் இருந்து, அனைத்து உயிர்களுக்கும் மகாசதாசிவர் அருள்புரிவதாய் ஸ்ரீஸ்கந்த புராணமும், ஸ்ரீதத்துவநிதியும்  கூறுகிறது!  ஆனால் "சிவப்பராக்கிரமம்" நூலோ கணக்கிமுடியா அளவு முகத்தினையும், கரத்தினையும் கொண்டவரென கூறுகிறது.                                                                                                                                                                                                         


"எண்ணில்பல் கோடி சேவடி முடிகள்

எண்ணில்பல் கோடிதிண் தோள்கள்

எண்ணில்பல் கோடி திருவுரு நாமம்

ஏர்கொள்முக் கண்முகம் இயல்பும்

எண்ணில்பல் கோடி எல்லைக்கப் பாலாய்

நின்றைஞ்ஞூற் றந்தணர் ஏத்தும்

எண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி

இவர்நம்மை ஆளுடை யாரே" 


என இவ்வடிவம் குறித்து திருவிசைப்பாவில் குறிப்புள்ளது. 







Comments

  1. மகாசதாசிவ மூர்த்தியைக் கண்டேன். சிறப்பு.

    ReplyDelete
  2. அருமையான பதிவு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சதாசிவ வடிவம்-11

கங்காள மூர்த்தியும் திரிவிக்ரமரும்

அகோர சிவ வடிவம்: 24