திரிபாதமூர்த்தி-20
திரிபாதமூர்த்தி-20
ஊழிக்காலம் தோன்றுகையில், நான்முகன், திருமால், உருத்திரன் மூவரும் பரம்பொருளான சிவனிடத்தில் ஒடுங்குவர். மாதம் பன்னிரண்டு கொண்டது தேவர்களுக்கு ஒருநாள், இந்த நாட்கள் பன்னீரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தால் ,அதுவே ஒரு ஊழிக்காலம்.இந்த ஊழிக்காலம் நான்கு கடந்தாலே அது பிரம்மனுக்கு ஒரு பகல். இதற்குள் தேவர்கள் ,மாவலி ,அற்புதன் போன்றோர் துஞ்சுவர்.இவர்களுக்கு பின் பிரம்மன் துஞ்சுவார்.இத்தகைய பிரமர் ஒருகோடி பேர் துஞ்சினால் அது திருமாலிற்கு ஒரு பகலாம். அதன்பின் தன் காலஅளவு கடந்தபின் திருமாலும்,ருத்திரனும் துஞ்சியபின் இவர்கள் அனைவரும் பரம்பொருளான சிவனிடம் கலந்துவிடுவர். இவ்வாறு பிரமர், திருமால், ருத்திரன் என மூவரும் பரம்பொருளான ஈசனிடம் ஒடுங்கிய கோலமே "திரிபாத மூர்த்தி" எனப்படும். இன்று இக்கோலம் தவறுதலாய் "ஏகபாதமூர்த்தி" என அழைக்கப்பட்டு வணங்கபடுகிறது பல தலங்களில். உண்மையில் ஏகபாதமூர்த்தி என்பது சிவதிருமேனிகளில் வேறு ஒரு கோலமாகும். ஏகபாதமூர்த்தி கோலத்தில் திருமாலும், பிரம்மனும் காலின்றி நேரே இறைவனிடத்தில் இணைந்திருக்கும் கோலமாகும்.
மேலுள்ள புகைப்படங்களில் உள்ள திருமேனி ஏகபாத மூர்த்தியா? திரிபாத மூர்த்தியா? மூன்று சிற்பங்களும் ஒரே மாதிரி உள்ளனவே?
ReplyDelete