சரபேசுவரர்-03

 சரபேசுவரர்-03


இரணியகசிபு எனும் அரக்கன் ஈசனை எண்ணி கடும்தவம்புரிந்து, "சுரர்கள், நரர்கள், யட்சர்கள், தேவர்கள், விலங்குகள்,  புள்ளினங்கள்,தாவரங்கள், மேலும் எந்த வித ஆயுதத்தாலும் நான் இறக்கக்கூடாது, என விநோதமான வரத்தினை கேட்டு வாங்கினான். வரத்தினை வாங்கியதுமில்லாமல், தன்னைத்தவிர எவரையும் வணங்கக்கூடாது என, தன்நாட்டு மக்களை துன்புறுத்திவந்தான். ஆனால் அவனுக்கு பிறந்த பிறப்பான பிரகலாதன், தன் தகப்பனை வணங்கமறுத்து திருமால் ஒருவரே தெய்வம் எனும் நெறியை ஏற்றிருந்தான்.

ஆத்திரமடைந்த இரண்யகசிபு தன்மகனை கொல்ல முடிவெடுத்து, பலவழிகளில் முயன்று தோல்வியுற்றான். மகனிடம் விவாதம் செய்தான் இரணியகசிபு. உன்கடவுளை என்னிடம் காட்டு என வினவ,  தூணிலிருப்பான், துரும்பிலும் இருப்பான் எம்பெருமான் என பதிலுரைத்தான். ஒருதூணை காட்டி இதில் இருப்பானா உன் இறைவன் என வினவ, ஆம் என உறைத்தான் பிரகலாதன், உடனே தன் கதையால் அத்தூணை அடித்து நொறுக்க அங்கிருந்து நரசிம்மராய் அவதாரம் எடுத்து வந்தார் திருமால், அழல் உமிழும் விழிகள், கூரிய நகங்கள் கொண்டு, நரவிலங்காய் கையில் ஆயுதம் ஏந்தாமல், தன் கூரிய நகத்தினாலேயே அவன் குடலைகிழித்து எறிந்து கொன்றார். அசுரனின் செங்குருதியை உரிஞ்சிய காரணத்தினால், நரசிம்மம் உக்கிரம் கொண்டு பல்லுயிர்க்கும் துன்பம் விளைவித்தது. நரசிம்மரின் சீற்றம் கண்டு அஞ்சிய தேவர்கள் ஈசனிடம் சரணடைய, பறவையின் உடலும், மனிதஉடலும், மிருகவடிவும் கொண்டு 'சரபேசுவர்' உருகொண்டார். இவ்வடிவத்தை 'சிம்மக்ன மூர்த்தி','நரஸிம்ம சம்ஹாரர்' என நூல்கள் குறிப்பிடுகிறது.சரபம் என்றால் எட்டுக்கால்கள், இரண்டுதலைகள் கொண்டபறவை என பொருள். நரசிம்மரின் உக்கிரம் தனித்து, உலகுயிர்களை பேரழிவிலிருந்து மீட்டார்.


"நன்னால் இரண்டு திருவடியும் நனிநீள்

வாலும் முகம் இரண்டும்

கொன்னார்சிறகும் உருத்திரமும்

கொடும்பேரார்ப்பும் எதிர்தோற்றிச்

செந்நீர் பருகிச் செருக்குநரமடங்கல் ஆவி

செகுத்துரிகொண்டு

ஒன்னார் குலங்கள் முழுதழிக்கும்

உடையான சரபத்திருவுருவம்"


என காஞ்சிப்புராணம் இவ்வடிவத்தை பற்றி கூறுகிறது.


 சரபேஸ்வரர் அமைப்பு:


வலக்கையில் வச்சிரம், முகதி, அபயம், எலும்பு, வில், உலக்கை, அக்னியையும், இடக்கையில் பாசக்கயிறு, வரதம், கதை, பாணம், கொடி, வாள், கபாலம், ஆலம், முத்கரம் ஏந்தியதாகவும், சரபரின் மூன்று கண்களில் சூரியன், சந்திரன், அக்னியும், இறக்கையில் காளி, துர்க்கையும் உள்ளதாய் சிற்பநூல்கள் கூறுகிறது.








Comments

  1. பழையாறை சிற்பங்களை பல முறை பார்த்துள்ளேன்.

    ReplyDelete
  2. Is it Sarabeswarer history? What about Prathingira Devi?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அடிமுடிகாணா அண்ணல்-16

பைரவ வடிவம்-25

சதாசிவ வடிவம்-11