மாதொருபாகன்:18

 மாதொருபாகன்:18


ஆணும், பெண்ணும் ஒத்த உரிமையும், இருவரின் ஒன்றுகூடலாலே உயிர்கள் தோன்றுகின்றன, எனும் தத்துவத்தினை உணர்த்தும் திருவுருவே அர்த்தநாரி எனும் மாதொருபாகன் திருவடிவம். பிருங்கி முனிவர், ஈசனை மட்டுமே வணங்கும் இயல்பினர். ஆதலால் உமைக்கு இயல்பாகவே சினம் ஏற்ப்பட்டது. பிருங்கியின் ஆற்றலை இதனால் குன்றசெய்தார் உமையம்மை. நேராக நிற்க முடியாமல் கூன்விழுந்து, உடல் உருக்குலைந்து எலும்புக்கூடானார். தன் பக்தனின் சோதனையை கண்டு, ஒருகால்  அளித்து அவரை நிற்கும்படி செய்தார். இவ்வாறு உமை ஏற்படுத்திய இடர்களை, ஈசன் களைந்தார். வேதனையுற்ற உமை ஈசனைநோக்கி கடுந்தவம் இயற்ற, தேவியின் தவத்திற்கு மனம்இறங்கிய ஈசர், தம் உடலில் பாதியை அளித்து, மங்கையொருபாகனானார்.


"நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்"

(ஐங்குறுநூறு)


"பெண்ணுறு ஒருதிறன் ஆகின்று

அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்"

(புறநானூறு)


"கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து

மங்கை உருவாய் மறை ஏத்த நிற்கும்"

(சிலப்பதிகாரம்)


மேற்கண்ட சங்க இலக்கிய பாடல்கள் இவ்வடிவத்தின் தொன்மையை பறைசாற்றுகிறது.


"வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் திகழ்மார்பில் நல்ல

பந்து அணவும் விரலாற் ஒரு பாகம் அமர்ந்து அருளிக்

கொந்து அணவும் பொழில்சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற

அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே"


"பாகம் கொப்பளித்த மாதர்"

"அரிவையோர் பாகர்"

"ஆணோடு பெண்ணுமாம் மெய்யன்"


போன்ற திருமுறை பாடல்களிலும் இவ்வடிவம் போற்றப்பட்டுள்ளது.


ஆகமங்கள் இவ்வடிவ இறைவரை அர்த்தநாரீஸ்வர மூர்த்தி என அழைக்கின்றன. வலபுறம் ஈசனும் இடபுறமும் உமையையும் அமைக்க வேண்டுமென தத்துவநிதி, காமிகாமகம் போன்ற நூல்கள் கூறுகிறது.






Comments

Post a Comment

Popular posts from this blog

அடிமுடிகாணா அண்ணல்-16

பைரவ வடிவம்-25

சதாசிவ வடிவம்-11