மாலைநேர நடன வடிவம் 10

 மாலைநேர நடன வடிவம்:10


பரம்பொருளான ஈசனை கலந்தாலோசிக்காமல் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்தமெடுக்க முனைந்தனர். மந்திரமலையே மத்தாக அமைத்து, வாசுகி பாம்பை கயிறாக்கி கடைய, உறுதியாக நிலைக்காமேல் மந்திரமலை தடுமாற, ஆமைவடிவம் கொண்டு திருமால், மந்திரமேலையை தூக்கி நிறுத்தினார். அமுதத்தைபெற வேண்டும் என்ற முனைப்பில் மாறிமாறி வேகமாய் வாசுகிபாம்பை பிடித்து கடைய, வலிதாங்காமல் வாசுகிபாம்பு விஷத்தை கக்கியது! அந்த ஆலகாலவிஷத்தின் தாக்கம் மெல்ல, தேவருக்கும் அசுரரையும் ஆட்கொள்ள ஆரம்பிக்க,அப்போதுதான் ஈசனை மறந்தது அனைவருக்கும் உரைக்க, உடனே அரஅர சிவசிவா என்ற அபயக்குரலெழுப்பினர். நிலையை உணர்ந்த ஈசர் அந்த ஆலகாலவிஷத்தை தாமே உண்டார். உலகம் நிலைகொண்டது.

ஈசன் ஆலகாலத்தை உண்டதும், களைத்து மயங்கியவர் போல் நடித்து தம்மில் பாதியான உமையை உபசரிக்கும் வண்ணம் செய்தார். அவ்வாறு ஈசர் கண்அமர்ந்த இரவே "ஏகாதசி" எனப்படுகிறது. அன்றிரவு முழுவதும் தேவர்கள் கண்விழித்து, இறைவன் திருப்பெயரை போற்றி துதித்தனர். அதனையே "துவாதசி " என்கின்றனர். அதற்கு அடுத்தநாளான, திரயோதசியில் தேவர்கள், முனிவர்கள் காண சூலத்தினை சுழற்றி கையில் டமருகம் ஏந்தி, ஒருயாமப்பொழுது ஈசன் நடனமாடினார். அதனை பிரதோசம் என கூறுவர். இதற்கு வேறு புராணகதையும் உண்டு அதனை கீழுள்ள இணைப்பில் காண்க :-


(https://factsofinscripitions.blogspot.com/2020/09/blog-post.html?m=1)


 மாலையும் இரவும் கலக்கும் பொழுதில் ஈசன் கைலையில் நடனமாடுவார். அந்த மாலைநேர நடனமே "சந்தியா தாண்டவம்" எனப்படுகிறது. இத்திருக்கோலத்தினை காண்போர் தம்வாழ்நாள் பாவத்தினை தொலைத்து புதியவாழ்வினை பெறுவர் என்பது நம்பிக்கை.

இத்தாண்டவ கோல.திற்கு கௌரிதாண்டவம், லக்ஷ்மி தாண்டவம், ரட்சதாண்டவம், புஜங்கலளிதம் என வேறு பெயரும் உண்டு.


இக்கோலத்தில் இறைவனுக்கு எட்டு அல்லது பத்துகைகள் சிற்பத்தில் வைப்பது உண்டு. பெரும்பாலும் நான்கு கைகளை வைப்பர்.காலின்கீழே முயலகன் இருப்பதும் உண்டு,இல்லாமலும் உண்டு. இடக்கையில் பாம்பினை ஏந்தியிருப்பார்.


"நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை

சூடலன்அந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில்

ஆடலன்அஞ்சொல் அணியிழையாளை யொருபாகம்

பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே"


"இடும்போது தடுத்தாட் கொள்வான் கடுத்தாடு கரதலத்தில் தமருகமும், எரிஅகலும் கரிய பாம்பும் பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே"


"மூடாய முயலகன் மூக்கப் பாம்பு

  முடைநா றியவெண் தலைமொய்த்த பல்பேய்

பாடா வருபூதங் கள்பாய் புலித்தோல்

  பரிசொன் றறியா தனபா ரிடங்கள்

தோடார் மலர்க்கொன் றையும்துன் னெருக்கும்

  துணைமா மணிநா கம்அரைக் கசைத்தொன்

றாடா தனவேசெய் தீர்எம் பெருமான்

  அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே"


மேற்கண்ட திருமுறை பாடல்களில் இவ்வடிவம் குறித்த குறிப்புகளை காணலாம்.




Comments

  1. சந்தியா தாண்டவம்....அரிய செய்திகள் அறிந்தேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அடிமுடிகாணா அண்ணல்-16

பைரவ வடிவம்-25

சதாசிவ வடிவம்-11