நல்லிருக்கை நாயகர்-14
நல்லிருக்கை நாயகர்-14
பார்வதியாய் புவியில் தோன்றி கடுந்தவம் மேற்கொண்டு ஈசனை மணந்தார் உமையம்மை, ஒருநாள் ஈசரிடம் தமக்கு சிவகாமங்களை உபதேசிக்க வேண்டினார். அதனையேற்று ஈசனும் தீட்சை வழங்கி, பிரணவமந்திரத்தை உபதேசித்தார், மலர்களை அணிந்து சிவனாரின் இடப்புற மடியினில் அமர்ந்து, பிரணவமந்திரத்தின் தோற்றம், பொருள், வழிபடும்முறைகளை கேட்க, ஈசனும் உமையம்மையின் வேண்டுகோளினை ஏற்று சுகாசனத்தில் அமர்ந்து, சிவஆகமங்களை உபதேசித்த கோலமே, சுகாசனமூர்த்தி கோலம் ஆகும்.
"முக்கணும் நிலவெழ முகிழ்த்த மூரலும்
சக்கர வதனமும் தயங்கு வேணியும்
செக்கர்மெய்யும் வதனும் ஆன.."
என வில்லிபாரதத்தில் வில்லியார் குறிப்பிடுகிறார்.
சிற்பங்களில் சுகாசனர்:
ஒருமுகம், மூன்று கண்கள், நான்கு கரங்கள் கொண்டு, இரு கரங்களில் மானும், மழுவும் ஏந்தி ஒருகரம் காக்கும் கரமாகவும், மறுகரம் வழங்கும் கரமாகவும் இருக்கும். ஈசனது சுகாசன கோலம், தனியாகவும், உமைசகிதமாகவும், கந்தனுடன் சேர்ந்து சோமாஸ்கந்தர் வடிவிலும் காட்டப்பட்டிருக்கும். புலித்தோலையும்,பட்டாடையும் அணிந்திருப்பார். உடலை எப்பக்கமும் சாய்க்காமல், நேராக நிமிர்த்திய நிலையில் ஒருகாலை தொங்கவிட்டும், மறுகாலை மடக்கியும் அமர்ந்ததே இவ்வாசன முறையாகும்.
சுகாசனமூர்த்தி...நல்லிருக்கை நாயகர் மிகவும் அழகான சொல் பயன்பாடு. அதிகம் ரசித்தேன்.
ReplyDeleteமிக்க நன்றியும் மகிழ்ச்சியும்
Delete