அடிமுடிகாணா அண்ணல்-16
அடிமுடிகாணா அண்ணல்-16
நான்முகனுக்கும் விஷ்ணுவிற்கும் ஒருமுறை யார் பெரியவர் என விவாதம் எழுந்தது. அச்சண்டையை தீர்த்துவைக்கவும், யார் உண்மையில் பெரியவர் என சர்ச்சையை தீர்த்துவைக்கவும், பேரொளியாக சோதித்தம்பம் ஒன்று தோன்றியது. அச்சோதியின் அடிமுடியை காண்பவரே தம்முள் பெரியவர் என முடிவெடுத்து, அன்னப்பறவையின் தோற்றத்தில் மேலே செல்வும், வராக அவதாரமெடுத்து கீழேசெல்லவும் தீர்மானித்து சென்றனர். வராக அவதாரமெடுத்து மண்ணைத்தோன்டியவாரு கீழே சென்று கொண்டிருந்தார் திருமால் நீண்டகாலம் கழிந்தும் அவரால் அச்சோதியின்அடியை காண இயலவில்லை. இதேநிலைமை தான் மேலே சென்ற நான்முகனுக்கும், அச்சமயம் மேலிருந்து கீழாக ஒரு தாழம்பூ வந்துகொண்டிருந்தது, அதனிடம் நான்முகன் எங்கிருந்து வருகிறாய் என வினவ, நான் சோதித்தம்பத்தின் முடியிலிருந்து கீழே நீண்டகாலமாய் வந்து கொண்டிருக்கிறேன் என பதிலுறைத்தது! நான்முகன் அம்மலரிடம், நானும் நீண்டகாலமாய் கீழிறிந்து பயணப்பட்டு மேலே சென்றுகொண்டிருக்கிறேன், இன்னும் அச்சோதியின் தலைப்குதியை காணமுடியவில்லை! நான்முடியை கண்டதாய் கூறப்போகிறேன், நீஎனக்கு சாட்சி சொல்லவரவேண்டும், என நான்முகன் கேட்டுக்கொள்ள, தாழம்பூவும் அதற்கு சம்மதித்தது!
நான்முகனும், தாழம்பூவும் கீழே வந்தடைந்தனர். அச்சமயம் வராக உருவிலிருந்த திருமால் அடியை காணாது தன் தோல்வியினை ஒப்புக்கொண்டு மேலே வந்தார். நான்முகனோ தாம் சோதித்தம்பத்தின் முடியை கண்டதாய் பொய்யுரைக்க, அதற்கு தாழம்பூவும் சான்றளித்தது! பொய்யுரையளித்ததால் நான்முகனுக்கு தனிக்கோவில் எங்கும் இல்லாமலும், தாழம்பூவினை ஈசனின் தலையில் சூடும் மலராய் இருக்கும் வாய்ப்பினையும் இழந்துவிட்டது. இவ்வாறு திருமாலிற்கும், நான்முகனுக்கும் யார் பெரியவர்! என்ற அகந்தையினை அழித்து, தாமே முழுமுதற்கடவுள் என சிவபெருமான் உணர்த்திய கோலமே "இலிங்கோத்பவர்" வடிவமாகும். இறைவனின் இக்கோலம் சிவாலயங்களில் கருவறையின் பின்புறம் வடிக்கப்படும். முதன்முதலாய் இவ்வடிவம், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் குடைவரையில் காணப்படுகிறது. சிவன் தீயிலிருந்து வெளிப்படுவது போன்றும், வராக வடிவில் கீழ்நோக்கி திருமால் செல்வது போன்றும், அன்னப்பறவை வடிவம் ஏந்தி நான்முகன் மேலே செல்வது போன்றும் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கும்.
ஈசனின் இப்புராணக்கதை லிங்கபுராணத்திலும், கூர்ம, வாயு புராணங்களில் விரிவாய் உள்ளது. திருமூலரின் திருமந்திரத்தின் பத்துபாடல்கள் இவ்வடிவம் குறித்து பாடுகிறது! பஞ்சபூத தலங்களில் அக்னி தலலேலான திருவண்ணாமலையில் இந்நிகழ்வு நடைபெற்றதாய் புராணங்கள் கூறுகிறது!
"துன்னிய விசும்பினூடு துணையுடன்
விடை மேற்கொண்டார்"
தன் துணையுடன் வானிலே தலைவனை விடைமேற்கண்டார்"
என சேக்கிழார் பெரிய புராணத்திலும்,
"அரிஅயன் தேடநின்ற பெருமான்"
"கனலுருவினன்"
"தழல்சேர்தருதிருமேனியன்"
"எரிதருமுருவினன்"
என திருமுறைகளிலும் இவ்விறைவடிவம் போற்றப்பட்டுள்ளது.
இறைவனின் இந்தவடிவம், லிங்கத்தினுள் சந்திரசேகரரைபோல அழகுறவும், நான்குகரத்துடனும், சடாமுடிகொண்டு அமையவேண்டும் என சிற்பநூல்கள் கூறுகிறது.
அடிமுடி காணா அண்ணலைக் கண்டேன். அருமை. புகைப்படங்களில், சிற்பங்கள் இருக்கும் இடத்தைக் குறித்தால் வாய்ப்பு கிடைக்கும்போது பார்க்க வாய்ப்பாக இருக்கும்.
ReplyDelete